ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-10


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
கடவுளின் திருவடியயை 
கருத்தினால் கொண்டவர்கள் 
கடந்திடுவர் பூமியிலே 
கண்டுவிட்ட பிறவிபயன் 
கடக்காமல் மற்றவரெல்லாம் 
கலங்கிதான் கிடப்பாரே 
பிறவிபயன் சேராமல் 
பேதமையில் உழல்வாரே 
வள்ளுவர் தமிழ்வழியை 
வாழ்வாக்கி கொள்ளலாமே 

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-9


கடவுள் வாழ்த்து 

குறள்-9 
................................. 
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
நல்ல குணத்தின் இருப்பிடமாம் 
நம் எண்ணம் இறைவனிடம் 
பொருந்தாமல் இருக்கும் வாழ்வோ 
புலனுடைய தலையினிலே 
கண் கூட பார்க்காமல் 
காது கூட கேட்காமல் 
பயனில்லா உடல்போலே 
பாழ் பட்டு இருக்குமே 
குறள் சொல்லும் வள்ளுவன் வழி 
கூறி நாம் வாழலாம்தானே 

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-8


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது. 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
அறக்கடல் விளக்கமாக 
அறியும் கடவுள் திருவடியை 
ஒருபோதும் தவறாது 
ஒன்றி வாழ்பவர்கள் தவிர 
ஏனைய பிறர்கெல்லாம் 
என்றென்றும் துன்பகடலாய் 
பிறவி பயன் அடையாமல் 
பிழையாகி வாழ்வாரே 
வள்ளுவன் குறள் பொருளை 
வளமாக்கி வாழலாமே. 

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-7




தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது. 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

ஒப்பு என்பது தமக்கின்றி 
ஒரே பொருளாய் கடவுளென்று 
தவறாது நினைப்பவர் தவிர 
தரணியில் மற்றவர்கெல்லாம் 
மனக்கவலை தீரவே தீரா 
மாண்புடன் வாழ்ந்து காட்டவே 
வள்ளுவன் உயர்வழியை 
வாழ்வியலை இருத்தலாமே.


செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-6


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 

ஐபுலனையும் வெற்றிகொண்டு 
ஐக்கியமான ஒருநிலையை 
ஒழுக்கமான உயர்வழியாய் 
யோகமாய் கொண்டவரை 
பின்பற்றி நாம் நடந்தால் 
பெரும் புகழ் வாழ்வு எய்தலாமே 
வள்ளுவர் சொல்வழியே 
வையத்தில் நாம் பெறுவோம்

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-5


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

இறை பொருள் எதுவென்று 
எண்ணத்தில் கண்டுணர்ந்தால் 
நல்வினையும் தீவினையும் 
ஞானத்தின் சமநிலையால் 
விரும்புவது புகழென்றே 
வேறொன்றும் தோன்றாதே 
திருவள்ளுவர் வாய்மொழியை 
தெரிந்து நாம் வாழ்வோமே .


அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்- 4



வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல. 


புது கவிதையாய் பொருள் 
............................................... 

விருப்பு வெறுப்பு அப்பாற்பட்ட 
வேறுபடா பரம்பொருளை 
விவேகத்தில் நிலைநிறுத்தி 
வேண்டுதலாய் பெற்று கொண்டால் 
துன்பம் என்றும் தோன்றாது 
துவக்கி விடுவோம் நாமுமே 
வள்ளுவன் வாய்மொழியை 
வெல்லுவோம் உயர்வழியாய்.